×

கலெக்டர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

புதுக்கோட்டை, அக்.1: வரதட்சணை புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் புதுகை கலெக்டர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள வெட்டிவயல் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி இலக்கியா (29). இவர் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்திற்கு தனது 7 வயது மகனுடன் வந்தார். அப்போது, தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை பாட்டிலை எடுத்து அக்கம், பாக்கம் பார்த்து தனது உடலில் ஊற்ற முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இலக்கியா கையில் வைத்திருந்த பாட்டிலை தட்டி பறித்தனர்.

இது குறித்து போலீசார் இலக்கியாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தன் மாமனார் கணேசன் , மாமியார் காளியம்மாள் மற்றும் உறவினர்கள் என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார்கள். இது குறித்து அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளேன். இந்த புகார் எந்த விசாரணையும் இல்லை. இந்நிலையில் சிலர் என்னை மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், என் புகார் மீது அறந்தாங்கி மகளிர் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுக்கொடுத்து விட்டு தற்கொலை செய்யலாம் என முடிவு செய்தேன் என்றார். சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோகர்ணம் போலீசார் இலக்கியாவின் மனுவை பெற்று விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Collector ,
× RELATED சமையல் செய்தபோது சேலையில் தீப்பற்றிய பெண் பரிதாப சாவு