×

புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் உண்டியலில் திருட்டு

புதுக்கோட்டை, அக்.1: புதுக்கோட்டை திருவள்ளுவர் நகர் பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று மர்ம போதை ஆசாமி ஒருவர் உண்டியலை உடைத்து அவருக்கு தேவையான பணத்தை மட்டும் எடுத்துவிட்டு மீதியை அங்கேயே போட்டு சென்றுள்ளார். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்தபோது உண்டியல் உடைந்து சேதமடைந்தது கிடந்தது. மேலும் பணம், சில்லரை காசுகள் சிதறி கிடைத்தது. பெருவாரியான உண்டியல் காசு இருந்துள்ளது. இது குறித்து கணேஷ்நகர் போலீசில் புகார் அளித்தனர் . போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Pudukottai Muthumariamman ,
× RELATED 50 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டம்