×

திமுகவில் சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கல்

கறம்பக்குடி, அக்.1: புதுக்கோட்டை மாவட்டம் திமுக வடக்கு ஒன்றியம், நகரம் சார்பாக இணைய தளம் வழியாக திமுகவில் சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் கலந்து கொண்டு தலைமை வகித்தார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை தழிழ் ராஜா, திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், நகர செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன், இணையம் மூலம் திமுகவில் சேர்ந்தவர்களை வரவேற்று உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,
× RELATED தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் அட்டை வழங்கல்