×

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகை,அக்.1: தொழிலாளர் நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தொமுச சார்பில் நாகை அரசு போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு போக்குவரத்து கழக மத்திய சங்க துணை தலைவர் இடும்பன்சாமி தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தொமுச செயலாளர் முரளி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். போக்குவரத்து கழகங்களை சீர்குலைக்கும் போக்கை கைவிட வேண்டும். போக்குவரத்துக்கழக நிர்வாகங்கள் அனைத்து போக்குவரத்துகளையும் இயக்க வேண்டும். குறைந்த பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்படுவதால் ஏற்படும் இழப்பை முழுமையாக அரசு ஈடுகட்ட வேண்டும். பல்வேறு தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தியுள்ளதை வாபஸ் பெற வேண்டும்.

தொழிலாளர் நலனுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் இயற்றியுள்ள சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தொமுச பொருளாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.மயிலாடுதுறை: மயிலாடுதுறை போக்குவரத்துக்கழக பணிமனை முன்போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ராஜசேகரன் தலைமை தாங்கினார். வெங்கடேசன், இளங்கோவன், பத்மநாபன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர், செந்தில்குமார், அண்ணாதுரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Transport workers ,state governments ,
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...