×

காய்ச்சல் உள்ளவர்கள், வயதானோர் கிராம சபை கூட்டம் வர வேண்டாம்


கோவை, அக். 1: கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி  வெளியிட்டுள்ள  செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி  தேதியன்று காலை 11 மணிக்கு கிராம சபைக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. மேற்படி கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கொரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் குறித்து விவாதித்தல், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல்,  ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

கிராம சபைக் கூட்டமானது திறந்த வெளியிலும் மற்றும் நோய் கட்டுப்பாடு இல்லாத பகுதியிலும் நடத்தப்பட உள்ளது. இந்த கிராமசபைக் கூட்டத்தில் கொரானா தொற்று தொடர்பான அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல் மற்றும் தொடர்பான அறிகுறிகள் இருப்பவர்கள், மிகவும் வயதானவர்கள் மற்றும் கைக்குழந்தைகள், கொரோனா காய்ச்சல் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் ஆகியோர் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. பொது மக்கள் முக கவசம் அணிந்து, சமுக இடைவெளியை கடைபிடித்து தங்கள் ஊராட்சியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் ராஜாமணி செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : elderly ,village council meeting ,
× RELATED ஓட்டுப்போட வந்த முதியவர்கள் 3 பேர் மயங்கி விழுந்து சாவு