×

கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோவை, அக்.1: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பு காரணமாக அசம்பாவித சம்பவம் நடக்காமல் தடுக்க கோவை நகர், புறநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. வழிபாட்டு தலங்கள், ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட், கலெக்டர் அலுவலகம், கடை வீதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை 935 போலீசாரும், நேற்று முன்தினம் இரவில் 565 போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டனர். காந்திபார்க், சுந்தராபுரம், மில்ரோடு, போத்தனூர் ரோடு உள்ளிட்ட 11 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனைக்கு பின்னரே அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட்டன. புறநகரில் 24 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு 1000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். வாளையார், மீனாட்சி புரம், வேலாந்தாவளம் சோதனைச்சாவடிகளில் அனைத்து வாகன ஓட்டிகளையும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். கோவை ரயில் நிலையம், விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போலீசார் பல இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்கப்பட்டது.

Tags : Coimbatore ,
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்