×

கொரோனா ஊரடங்கு காரணமாக திருச்செங்கோட்டில் கிரிவலம் செல்ல தடை

திருச்செங்கோடு, அக்.1: திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் இக்கோயிலில் உமையொரு பாகனாக சுவாமி காட்சி தருகிறார். ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருச்செங்கோடு மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இந்நிலையில், இன்று(வியாழக்கிழமை) அதிகாலையில் துவங்கி நாளை(2ம் தேதி) அதிகாலை 2.55 மணியளவில் பவுர்ணமி நிறைவடைகிறது. ஆனால், கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், பவுர்ணமியன்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Tiruchengode ,
× RELATED திருச்செங்கோடு அருகே நிலை தடுமாறி...