×

25 சதவீத இடஒதுக்கீட்டில் 61 தனியார் பள்ளிகளில் இன்று குலுக்கல் மூலம் மாணவர் சேர்க்கை

நாமக்கல், அக்.1: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 157 தனியார் மெட்ரிக் மற்றும் நர்சரி பிரைமரி பள்ளிகளில் 2020-21ம் கல்வி ஆண்டில், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி 25 சதவீத இடஒதுக்கீட்டில் நுழைவு நிலை வகுப்பில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. இதில், இடஒதுக்கீட்டை விட, அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில், தகுதியான விண்ணப்பங்களுக்கு இன்று(1ம் தேதி) குலுக்கல் மூலம் தகுதியான மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறியதாவது: 25 சதவீத இடஒதுக்கீட்டில், 40 மெட்ரிக் பள்ளி, 21 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அந்த பள்ளிகளில் இன்று, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள்,  வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர் ஆகியோர் இன்று குலுக்கல் நடத்தி மாணவ, மாணவியருக்கு சேர்க்கை அளிப்பார்கள். இதில் பெற்றோர்கள் கலந்து கொள்ளாலாம். ஏற்கனவே உரிய சான்றிதழை ஆன்லைன் மூலம் அளிக்காதவர்கள், குலுக்கல் நடைபெறுவதற்கு முன், அந்தந்த பள்ளியில் ஒப்படைத்து குலுக்கலில் கலந்து கொள்ளலாம். குறைவான அளவு விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில், தகுதியான மாணவர்களுக்கு சேர்க்கை அளிக்கப்படும்.

Tags : schools ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...