×

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, அக்.1: கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்து கழக புறநகர் கிளை பணிமனை எதிரில், அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பணிமனை தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். செயலாளர் பொன்னுசாமி வரவேற்றார். இதில், தொமுச மண்டல பொதுச்செயலாளர் கிருஷ்ணன், அமைப்பு செயலாளர் பரமசிவம், மத்திய சங்க துணைத் தலைவர் ஞானசேகரன், மாவட்ட கவுன்சில் தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். போக்குவரத்து கழக வழித்தடங்களில் தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்தும் ஓட்டும் முயற்சியை கைவிட வேண்டும்.

கொரோனா தொற்றால் மரணமடைந்த தொழிலாளர்களுக்கு, ₹25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள பணப் பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில், பணிமனை துணை தலைவர்கள் மாதவன், சுப்பிரமணி, துணை செயலாளர்கள் கண்ணன், ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் பைரீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பணிமனை பொருளாளர் முனிரத்தினம் நன்றி கூறினார்.

Tags : Transport Corporation ,
× RELATED அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்