×

ஒன்றியக்குழு கூட்டம்

காரைக்குடி, அக்.1:  காரைக்குடி அருகே சாக்கோட்டையில் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் சரண்யா செந்தில் தலைமையில் நடந்தது. துணைத்த லைவர் கார்த்திக், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ராதாபால சுப்பிரணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருப்பதி ராஜன், ஸ்ரீதர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்கம், ரேவதி சின்னத்துரை, தேவி மீனாள், ஜெயந்தி, திவ்யா, சுப்பிரமணி, ராமச்சந்திரன், யசோதா, தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திமுக உறுப்பினர் சொக்கலிங்கம் பேசுகையில், சங்கராபுரம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் தனி அதிகாரி நியமிக்க வேண்டும். இதனை தீர்மானமாக கொண்டுவர வேண்டும் என்றார்.
தலைவர் சரண்யா செந்தில் பேசுகையில், இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கப்படும் என்றார்.

Tags : Union Committee Meeting ,
× RELATED பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம்