×

எச்.ராஜா பிறந்த நாள் விழா

காரைக்குடி, அக்.1:  காரைக்குடியில் முன்னாள் எம்எல்ஏவும், பாஜக முக்கியதலைவர்களுள் ஒருவரான எச்.ராஜா தனது பிறந்தநாள் விழாவை இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலபிரிவு மாவட்ட தலைவர் சபரி டிராவல்ஸ் கோவிந்தராஜ் வரவேற்றார். மாவட்ட தலைவர் ஸ்தபதி செல்வராஜ் தலைமை வகித்தார். துணை தலைவர் எஸ்வி நாராயணன், மாவட்ட செயலாளர்கள் நாகராஜ், சிவானந்தம் முன்னிலை வகித்தனர். காளையார்கோவில் முன்னாள் ஒன்றிய தலைவர் மேப்பல் சக்தி, மார்த்தாண்டன், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் கணேஷ்ராம், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் பொறியாளர் ஜோதிராஜ், நகர தலைவர் சந்திரன், அரசுதொடர்பு பிரிவு செயலாளர் பிரான்சிஸ், நகர செயலாளர் மணிகண்டன், ஆடியோ கார்த்தி, நகர பொதுச்செயலாளர்கள் பாண்டியன், மலைராம், தமிழ்வளர்ச்சி பிரிபு மாநில செயலாளர் காசிஸ்ரீ முத்துராமன், நகரதலைவர் ராஜாராம், ஊடகபிரிவு மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பாகனேரி கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அரியக்குடி முதியோர் இல்லத்திற்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனைக்கு சானிட்டரி இயந்திரம், முகக்கவசம் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.

Tags : H.Raja Birthday Celebration ,