×

கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை, அக். 1: பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்கான குற்றவாளிகளை சிறையில் அடைக்க வலியுறுத்தி மதுரை நெல்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமை வகிக்க, தெற்கு தொகுதி தலைவர் தாஜுதீன் வரவேற்றார். ஜமாத் பொருளாளர் ராஜ்கபூர், மாநில பேச்சாளர் இத்ரீஸ், விசி கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் இன்குலாப், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்டத்தலைவர் அபுதாகீர் கண்டன உரை நிகழ்த்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சிதம்பரத்தில் பாஜக மகளிரணி சார்பில் ...