×

மதுரை ஜிஹெச் முன்பு மறியல்

மதுரை, அக். 1: மதுரை கருப்பாயூரணியை சேர்ந்தவர் நிர்மலா (51) கட்டிட தொழிலாளியான இவர், நேற்று பாண்டிகோவில் அருகே வேலைக்கு சென்று விட்டு திரும்பினார். அப்போது, ஏற்பட்ட சாலை விபத்தில் நிர்மலா உயிரிழந்தார். இவரது உடல் மதுரை ஜிஹெச்சிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, உடனே உடலை பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் அனுமதி சீட்டு தராமல், தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. உடனே நிர்மலாவின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஜிஹெச் முன்பு சாலைமறியலில் ஈடுப்பட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதிச்சியம் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.

Tags : Madurai GH ,
× RELATED மதுரை ஜி.ஹெச்சில் சிகிச்சை சரியில்லை 2...