×

மதுரை கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனுதாக்கலில் அதிமுக, அமமுகவினர் மோதல், மறியல் தேர்தல் ஒத்திவைப்பு

மதுரை, அக். 1: மதுரை ஞானஒளிபுரம், விசுவாசபுரி 3வது தெருவில் மதுரை தாலுகா வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு மொத்தம் 8,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கத்தில் உள்ள 11 நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று நடந்தது. இச்சங்கத்தில் விவசாயம், விவசாயம் சார்ந்த கடன்கள் அதிகளவில் ஏற்படும் இதனால் இத்தேர்தலில் தலைவர் பதவியை பிடிக்க அதிமுக, அமமுக கட்சியினர் இடையை கடும் போட்டி இருந்தது. நேற்று 2 கட்சியினரும் வேட்பு மனு தாக்கல் செய்ய திரண்டு வந்தனர். .

அதிமுக சார்பில் பகுதி செயலாளர் முருகன் தலைமையில் ஒரு அணியாகவும், அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையில் ஒரு அணியாகவும் வந்தனர். அப்போது அதிமுகவினரிடம் மட்டும் முதலில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டதாகவும், அமமுகவினரிடம் முறையாக வேட்பு மனுக்கள் பெறப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அமமுகவினர் வேட்பு மனுதாக்கல் செய்தவர்களுக்கு முறையான மனு ரசீது தரப்படவில்லை. இதனால் ரசீது கேட்டு அமமுகவினர் கூச்சல் போட்டனர். அதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். மாலை 4 மணி வரை இப்பிரச்னை நீடித்ததால், முறையாக தேர்தல் நடத்த கோரி அமமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, மறியலை கைவிட்டனர். அதன்பின்பும் இருதரப்பினரும் கோஷமிட்டதால் மோதிக்கொள்ளும் சூழ்நிலை உறுவானது. இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணம்காட்டி நிர்வாகக்குழு தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்து அதற்கான அறிவிப்பை தகவல் பலகையில் ஒட்டினார். அதன்பின்வே அதிமுக, அமமுகவினர் கலைந்து சென்றனர்.

Tags : AIADMK ,clash ,Madurai Co-operative Union ,
× RELATED டெண்டர் எடுப்பதில் அதிமுகவில் கோஷ்டி...