×

பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் 9 திமுக ஒன்றிய குழு உறுப்பினர்கள் புறக்கணிப்பு: தீர்மானங்கள் சரியில்லை என குற்றச்சாட்டு

திருவள்ளூர்: ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தை 9 திமுக ஒன்றிய குழு உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். பூண்டி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றிய குழு பெருந்தலைவர் பி.வெங்கட்ரமணா (அதிமுக) தலைமையில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 18 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் திமுகவைச் சேர்ந்த துணை பெருந்தலைவர் மகாலட்சுமி மோதிலால் உள்பட திமுகவினர் 9 பேரும், அதிமுகவினர் 6 பேரும், 1 பாஜக, 1 தேமுதிக, 1 சுயேச்சை என 18 புதிய குழு உறுப்பினர்களும் உள்ளனர்.

நேற்று கூட்டத்தில் கொண்டு வரப்படும் தீர்மானங்கள் சரியாக இல்லை என்றும், ஒன்றியக்குழு கூட்டத்திற்காக துணைப் பெருந்தலைவரை கலந்து ஆலோசிப்பதில்லை என்றும், வரவு மற்றும் செலவு கணக்குகளை முறையாக காட்டாததாலும், அரசு நிகழ்ச்சிகளுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் திமுகவை சேர்ந்த ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் மகாலட்சுமி மோதிலால் தலைமையில் திமுக ஒன்றிய குழு உறுப்பினர்கள் பேபி நாகபூஷணம், பிரசாந்தி ரவி, எம்.குமார், ஏ.தேன்மொழி ஏழுமலை, எஸ்.ஞானமுத்து, சுபாஷினி பாஸ்கர், ரெஜிலா மோசஸ், மஞ்சு லிங்கேஷ்குமார் ஆகிய 9 பேரும் ஒன்றியக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளியேறிவிட்டனர்.

Tags : Boondi Panchayat Union Committee Meeting 9 DMK Union Committee Members Ignore: Allegation ,
× RELATED பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் 9...