×

சிஎம்டிஏ பெண் அதிகாரியை வியாபாரிகள் திடீர் முற்றுகை

அண்ணாநகர்: கொரோனா தொற்று அதிகமாக பரவியதால் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. கடந்த 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கடந்த 28ம் தேதி காய்கறி மார்க்கெட் திறக்கப்பட்டது. பூ, பழம், சிறு மொத்த காய்கறிகள் கடை திறக்கப்படவில்லை. இந்நிலையில், தக்காளி மைதானத்தின் பூட்டை உடைத்து தக்காளி வாகனங்கள் அத்துமீறி சென்றுள்ளனர். சி.எம்.டி.ஏ பெண் அதிகாரி கல்பனா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீண்டும் அந்த இடத்தை பூட்டுப் போட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுமார் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியை சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக, நேற்று சி.எம்.டி.ஏ அதிகாரி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : CMDA ,officer ,traders ,
× RELATED சிஎம்டிஏ அலுவலகத்தில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை