×

திருமங்கலம் குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு கொரோனா

அண்ணாநகர்: திருமங்கலம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை திருமங்கலம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் கடந்த வாரம் காய்ச்சல், இருமல், சளியால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு செய்த பரிசோதனையில் நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவர் பணிபுரிந்த அறை பூட்டப்பட்டது. பின்னர், திருமங்கலம் காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்து வருகின்றனர்.

Tags : Corona ,Thirumangalam Criminal Investigation ,
× RELATED கால்பந்து நட்சத்திரம் சுவாரெசுக்கு கொரோனா