×

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் குறைதீர்ப்பாளர் அலுவலகம் இடமாற்றம்

சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மின்குறை தீர்ப்பாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய செயலாளர் சின்னராஜலு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அலுவலகம் தற்பொழுது தனது சொந்த வளாகத்தில் கீழ்க்கண்ட முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது. 4வது தளம், சிட்கோ தலைமை நிர்வாக அலுவலக கட்டிடம், திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை - 600 032. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய அலுவலகமும் மற்றும் மின் குறைதீர்ப்பாளர் அலுவலகமும் இனி இந்த முகவரியில் இயங்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Electrical Regulatory Authority Electrical Regulator Office ,
× RELATED தூத்துக்குடி கலெக்டர் உள்பட 14 ஐஏஎஸ்...