100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் 100 நாள் திட்ட தொழி லாளர்களுக்கு அடையாள அட்டை கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய வழுதலம்பேடு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு பெரும்பாலான மக்கள் மகாத்மா காந்தி100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணியாளர்களுக்கு முறையாக 100 நாள் அட்டை வழங்க வேண்டும் என பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்க மாவட்ட செயலாளர்  துளசி நாராயணன், நிர்வாகிகள் ராஜேந்திரன், லோகநாதன், சிவகுமார் ஆகியோர் தலைமையில் நேற்று காலை, 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஏராளமானனோர், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷமிட்டனர்.

தகவலறிந்து  வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், அங்கு சென்றார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரசம் பேசி, அவர்களுக்கு ஓரிரு நாட்களில் அடையாள அட்டை வழங்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: