×

உலக இதய தினத்தையொட்டி மாதம் முழுவதும் குறைந்த செலவில் பரிசோதனை: ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் நடக்கிறது

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் உலக இதய தினத்தையொட்டி, அக்டோபர் மாதம் முழுவதும் குறைந்த செலவில் சிறப்பு இருதய பரிசோதனை நடக்க இருக்கிறது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உலக இதய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமை தாங்கினார். மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் பத்ரி நாராயணன், டாக்டர் ஹரிஹரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், மருத்துவமனை நிர்வாகி டாக்டர் ரமேஷ் கூறுகையில், 2016ம் ஆண்டு கணக்குப்படி தமிழகத்தில் ஆண்டுக்கு 17 லட்சம் மக்கள் இதயம் தொடர்பான பிரச்னைகளில் இறக்கின்றனர்.

நம் நாட்டில் இதயம், கேன்சர், டயபடீஸ் போன்ற நோய்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி தற்போது நடக்கிறது. இதை முன்னிட்டு, வழக்கமாக 750க்கு செய்யப்படும் இருதய பரிசோதனை, பங்காரு அடிகளாரின் வழிகாட்டுதலின்படி, ₹99க்கு வழங்க சிறப்பு இருதய பரிசோதனையை அறிமுகப்படுத்தியுள்ளளோம். அதில், ஏழை, எளிய மக்களுக்கு மிக குறைவான கட்டணத்தில் உலகத்தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இந்த குறைந்த செலவிலான பரிசோதனை அக்டோபர் மாதம் முழுவதும் செய்யப்படும் என்றார்.

Tags : World Heart Day ,Adiparasakthi Medical College ,
× RELATED சாந்தி மருத்துவமனை சார்பில் தென்காசியில் விழிப்புணர்வு பேரணி