கொரோனாவால் உயிரிழந்த எஸ்ஐ உருவ படத்திற்கு டிஐஜி மலர் தூவி மரியாதை

அணைக்கட்டு, செப்.30: அணைக்கட்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சண்முகம். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆம்பூர் சப்-டிவிசனுக்கு மாற்றப்பட்டு அங்கு பணியில் இருந்தார். இருப்பினும் டெப்டேசனாக மாற்றப்பட்டிருந்தால், அவர் அணைக்கட்டு காவல் நிலையத்திலேயே பணியில் இருந்து வந்தார்.இந்நிலையில், அவர் அங்கு பணியில் இருந்தபோது கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 27ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான ஒடுகத்தூரில் அன்றைய தினம் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், அணைக்கட்டு காவல் நிலையத்தில் இறந்த எஸ்ஐ சண்முகம் உருவ படத்திற்கு நேற்று முன்தினம் மாலை டிஐஜி காமினி, எஸ்பி செல்வகுமார், எடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்ஐக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories:

>