×

பஸ்சில் இருந்து தவறி விழுந்து மாஜி ஏட்டு பலி

வி.கே.புரம், செப். 30:  பாபநாசம் பொதிகையடியை சேர்ந்தவர் சேக்இப்ராகிம் (76). ஓய்வுபெற்ற தலைமை காவலரான இவர், நேற்று பாபநாசத்தில் இருந்து வி.கே.புரத்துக்கு மினிபஸ்சில் சென்று கொண்டிருந்தார். அவர் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் பஸ்சை விட்டு இறங்கியவர் தடுமாறி விழுந்தார். இதில் முகம் மற்றும் தலையில் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சேக் இப்ராகிம், அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வி.கே.புரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : record holder ,
× RELATED பஸ் மீது மோதி இறந்த மயில்