×

காலியாக உள்ள மானூர் ஒன்றிய பள்ளிகளில் சத்துணவு பணியிடங்களுக்கு மனு அளிக்க பெண்கள் தீவிரம்

மானூர், செப். 30:   மானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானோர் விண்ணப்ப மனுக்கள் அளிக்கலாம் என கடந்த 26ம்தேதி அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் அமைப்பாளர் பணிக்கு காலியாக உள்ள 17 இடங்களுக்கும், உதவியாளர் பணிக்கு 26 இடங்களுக்கும் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். இதையடுத்து கல்விச்சான்று, வயது, இருப்பிடம், சாதி, முன்னுரிமை தகுதிக்கான சான்றுடன் அக்.3ம் தேதி வரை விண்ணப்பம் பெறப்படும் என அறிவிப்பு பலகையில் தகவல் வெளியிடப்பட்டது.

காலியாக உள்ள பணியிடத்திலிருந்து விண்ணப்பத்தாரர் 3 கி.மீட்டருக்குள் குடியிருக்க வேண்டும் என விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மானூர் வட்டாரத்தைச் சேர்ந்த பெண்கள் விண்ணப்பம் மனுக்கள் அளிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். நேற்று (29ம்ததி) மாலை  6 மணி வரை அமைப்பாளர் பணிக்கு 328 விண்ணப்பங்களும், உதவியாளர் பணிக்கு 171 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

Tags : schools ,Manor Union ,
× RELATED டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்