×

எம்ஆர்கே பன்னீர்செல்வம் எம்எல்ஏ உட்பட 413 பேர் மீது வழக்கு பதிவு

சிதம்பரம், செப். 30:  புதிய வேளாண் சட்டத் திருத்தத்தை எதிர்த்து கடலூர் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றனர். இந்நிலையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிதம்பரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவின் முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் எம்எல்ஏ, சிதம்பரம் நகர திமுக செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட 120 பேர் மீது சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புவனகிரி ஒன்றிய நகர திமுக சார்பில் டாக்டர் மனோகர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக 90 பேர் மீது புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கீரப்பாளையத்தில் திமுக ஒன்றிய செயலாளர் சபாநாயகம் தலைமையிலும், புவனகிரி பாலம் அருகில் மார்க்சிஸ்ட் ராமச்சந்திரன் தலைமையிலும் மறியலில் ஈடுபட்ட 130 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பரங்கிப்பேட்டையில் ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள் தலைமையில்  போராட்டத்தில் ஈடுபட்டதாக 73 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 413 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags : MRK Panneerselvam MLA ,
× RELATED திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்...