×

சிதம்பரம் அருகே முதலை கடித்து இழுத்து சென்ற தொழிலாளியின் உடல் மீட்பு

சிதம்பரம், செப். 30: சிதம்பரம் அருகே ஆற்றில் குளிக்க சென்ற தொழிலாளியை முதலை இழுத்து சென்றதில் அவர் உயிரிழந்தார். அவரின் உடல் நேற்று காலை மீட்கப்பட்டது.  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பழைய நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி என்கிற அறிவானந்தம் (56). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு பழையநல்லூர் கிராமத்தின் அருகே ஓடும் பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக இறங்கினார். அப்போது இவரை ஆற்றில் இருந்த முதலை ஒன்று கடித்து இழுத்து சென்றது.  இதுபற்றி கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் மற்றும் சிதம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மாயமானவரை பழைய கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் தேடினர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 இந்நிலையில் நேற்று காலை 2வது நாளாக தேடும் பணி தொடங்கியது. அப்போது சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்புச் சுவரின் அருகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறிய படகில் சென்ற அப்பகுதியினர் முனுசாமி உடலை மீட்டனர். பின்னர் போலீசார் மற்றும் சிதம்பரம் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது உயிரிழப்பை தடுக்க நடவடிக்கைபழைய நல்லூர் கிராம மக்கள் கூறுகையில், பழைய கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் முதலைகள் நடமாட்டம் உள்ளதால் முதலைகளை பிடித்து பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்று விட வேண்டும், ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் தேவைக்காக இறங்கும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை செய்து தர வேண்டும். சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு இந்த பழைய கொள்ளிடம் ஆறுதான் முக்கிய நீராதாரம். மீன் பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக் காக இந்த தண்ணீரை பயன்படுத்தி வருகிறோம். ஏற்கனவே முதலை கடித்து உயிரிழந்த பாண்டித்துரை என்பவரின் உடல் கிடைக்காததால் அவரின் குடும்பத்திற்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை அதனால் முதலையால் மக்கள் உயிரிழப்பை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

குடும்பத்துக்கு நிவாரணம்ம ுதலை கடித்து உயிரிழந்த அறிவானந்தம் குடும்பத்திற்கு வனத்துறை மூலம் நிவாரணம் வழங்கப்பட்டது. முதல் தவணையாக ரூ.50 ஆயிரத்தை வன அலுவலர் செந்தில்குமார், அறிவானந்தம் குடும்பத்தினரிடம் வழங்கினார். அப்போது வனவர் அஜிதா, வன காப்பாளர்கள் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Recovery ,Chidambaram ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...