×

10ம் வகுப்பு தனித்தேர்வு 29 ஆயிரம் விடைத்தாள்களை திருத்தும் பணி தீவிரம் 2 நாளில் முடிக்க திட்டம்

நாமக்கல், செப்.30: நாமக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தனித்தேர்வில் பங்கேற்றவர்களின் 29 ஆயிரம் விடைத்தாள்களை திருத்தும் பணியை 2 நாளில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு கடந்த வாரம் நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில் 4 மையங்களில் 320 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினார்கள். நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 9 மாவட்டங்களைச் சேர்ந்த 29 ஆயிரம் விடைத்தாள் திருத்தப்படுகிறது. விடைத்தாள் திருத்தும் பணி நேற்று துவங்கியது. நேற்று 42 முதன்மை தேர்வர்கள், 42 கூர்ந்து ஆய்வு அலுவலர்கள்(மூத்த பட்டதாரி ஆசிரியர்கள்) விடைத்தாளை திருத்தினார்கள். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அய்யண்ணன் விடைத்தாள் திருத்தும் முகாமுக்கு நேரில் சென்று  ஆய்வு செய்தார். அப்போது, ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார். விடைத்தாளை முழுமையாக மதிப்பீடு செய்யவேண்டும். அனைத்து பக்கங்களையும் கவனமாக பார்த்து மதிப்பீடு செய்யவேண்டும் என அறிவுறுத்தினார். இன்றும்(30ம் தேதி), நாளையும்(1ம் தேதி) 430 உதவித் தேர்வர்கள் விடைத்தாளை திருத்துகிறார்கள். 2 நாட்களில் விடைத்தாள்களை திருத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tags : examination ,
× RELATED மயிலாடும்பாறை அருகே சாலைப்பணி தீவிரம்