×

மாவட்டத்தில் பெண் டாக்டர் உள்பட 140 பேருக்கு கொரோனா

நாமக்கல், செப்.30: நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பல்வேறு இடங்களில் மினி லாக்டவுன் முறையை மாவட்ட நிர்வாகம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. ஆனாலும், தொற்று பரவல் கட்டுக்குள் வராததால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், நேற்று ஒரேநாளில் 140 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் கலெக்டரின் தபேதார், திருச்செங்கோட்டில் என்ஜினீயர், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர், குமாரமங்கலம் மின்வாரிய பணியாளர், அரசு பஸ் கண்டக்டர், ஆயுதப்படை போலீஸ்காரர், ராசிபுரத்தில் பெண் டாக்டர், மின்வாரிய உதவி இன்ஜினீயர் உள்பட 140 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,327 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4,197 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 71 பேர் உயிரிழந்துள்ளனர். 1,059 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Corona ,district ,doctor ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா