×

பள்ளி மாணவிகளுக்கு செல்போன் திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் வழங்கினார்

ராசிபுரம், செப்.30: கொரோனா ஊரடங்கால் பள்ளி திறப்பு தாமதமாகியுள்ளது. இதனால், வீட்டில் முடங்கியுள்ள மாணவ-மாணவிகளுக்கு, ஆன்லைன் மூலம் பாடம் எடுக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இம்முறையில் செல்போன் முக்கிய இடம்பிடித்துள்ளது. ஆனால், கொரோனா ஊரடங்கால் கிராமப்புற மக்கள் வருவாய் இன்றி தவித்து வரும் நிலையில், அங்குள்ள மாணவர்களால் செல்போன் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 5 பேருக்கு இணையதள வசதி கொண்ட செல்போன்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ராசிபுரம் நகர செயலாளர் சங்கர், துணை செயலாளர்கள் ஆனந்தன், ரவிச்சந்திரன், பொருளாளர் செல்வம், கலை இலக்கிய அணியின் மாவட்ட அமைப்பாளர் ரங்கசாமி, மருத்துவரணி ராஜேஷ்பாபு, துணை அமைப்பாளர் சுதா ஜெயக்குமார் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியினர் சீனிவாசன், அசோக்குமார், சாம்ராஜ் உள்ளிட்டோர் கலந்து ொண்டனர்.

Tags : Rajeskumar ,DMK ,school students ,
× RELATED அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5%...