×

நாமக்கல்லில் பரவலாக மழை மங்களபுரத்தில் கொட்டித்தீர்த்தது

நாமக்கல், செப்.30: நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனை பயன்படுத்தி வேளாண் பணிகளை விவசாயிகள் முடுக்கி விட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு மேல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் இந்த மழை நீடித்தது. நேற்று காலை 6 மணி வரை மாவட்டத்தின் பல பகுதியில் பதிவான மழை அளவு விபரம்(மில்லி மீட்டரில்) வருமாறு: எருமப்பட்டி- 3, மங்களபுரம்- 42, நாமக்கல்- 17, மோகனூர்- 3, புதுச்சத்திரம்- 15, ராசிபுரம்- 17, சேந்தமங்கலம்- 12, கலெக்டர் அலுவலக வளாகம்- 25 மற்றும் கொல்லிமலை பகுதியில் 8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

Tags : Namakkal ,Mangalapuram ,
× RELATED சென்னையில் ஒரு மணி நேரத்திற்கும்...