×

தேன்கனிக்கோட்டையில் மாற்று கட்சியினர் 200 பேர் திமுகவில் இணைந்தனர்

தேன்கனிக்கோட்டை, செப்.30: தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் 3, 4 மற்றும் 10வது வார்டுகளில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய அசேன்ராஜா, அப்பு, மகேந்திரன், பீட்டர், அஜித், மாதேஷ், ஆனந்த், சிதம்பரம், பாண்டி, கிருஷ்ணன், பிரேம்குமார் உட்பட 200 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி பேளகொண்டப்பள்ளியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்தது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ, கட்சியில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில், பேரூர் செயலாளர் சீனிவாசன், துணை செயலாளர் சக்திவேல், முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள் மணிவண்ணன், எல்லப்பன், சீதர், அண்ணாதுரை, லிங்கோஜிராவ், சுப்பிரமணி, கோபி, நஞ்சப்பன், அவின்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : alternative parties ,DMK ,
× RELATED தேன்கனிக்கோட்டை அருகே கிராமத்தில் நுழைந்து 10 யானைகள் அட்டகாசம்