×

அரசு பாலிடெக்னிக்கில் நேரடி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கிருஷ்ணகிரி, செப்.30: கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சாரதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 12ம் வகுப்பு (இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம்), தொழில் பிரிவில் (கணிதம் (அ) இயற்பியல் (அ) வேதியியல்) மற்றும் 2 ஆண்டுகள் உரிய தொழில் பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இதுவரை இணையதளத்தில் விண்ணப்பிக்காதவர்கள், தற்போது நேரடியாக கல்லூரிக்கு வந்து அக்டோபர் 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதி உள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Polytechnic ,Government ,
× RELATED அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் கட்ட...