×

தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, செப்.30: தர்மபுரி மாவட்டத்தில் ஆதி திராவிடர், அருந்ததியர், குறவர், போயர் இன மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைகளை பறிக்கும் அதிமுக அரசை கண்டித்து, கலெக்டர் அலுவலகம் முன் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ தலைமை வகித்தார். விசிக மாவட்ட செயலாளர் ஜெயந்தி வரவேற்றார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி.சிற்றரசு, விசிக ஜானகிராமன், மதிமுக தங்கராஜ், சிபிஎம் குமார், சிபிஐ தேவராஜன், தமுமுக தென்றல்யாசின், முஸ்லிம் லீக் அன்வர்பாஷா, கொங்கு மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தனர்.

விசிக தமிழ்செல்வன், கோவேந்தன், நந்தன், முன்னாள் எம்பி தாமரைச்செல்வன், முன்னாள் எம்எல்ஏ டெல்லிபாபு ஆகியோர் பேசினர்.கூட்டத்தில் நிர்வாகிகள் பேசுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் ஏ.ரெட்டிஅள்ளி, ஆட்டுக்காரன்பட்டி, பழைய இண்டூர், கிருஷ்ணாபுரம் போன்ற மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 1991 முதல் 2000 வரை ஆதிதிராவிடர், அருந்ததியர், குறவர், போயர், இன மக்களுக்கு, வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா முந்தைய அரசால் வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட பட்டாவின் நிலத்தை அளந்து பயனாளிகளுக்கு தரவில்லை. , நீதிமன்றம் உத்தரவிட்டும் வீட்டு மனை வழங்கப்படவில்லை. இந்த வீட்டு மனைகளை பறிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. வீட்டுமனை வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் விரைவில் நடத்தப்படும்,’ என்றனர்.

Tags : Demonstration ,Collector ,Democratic Progressive Alliance ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...