×

பருவமழையையொட்டி பேரிடர் மீட்பு கருவிகளை உதவி இயக்குனர் ஆய்வு

பாலக்கோடு, செப்.30:  பாலக்கோடு பேரூராட்சியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் மேலாண்மை கருவிகளான மரம் அறுக்கும் கருவிகள், ஜெனரேட்டர், மோட்டார்கள், மணிலாகயிறு, மூங்கில் மற்றும் சவுக்கு மரங்கள், நீச்சல் தெரிந்த நபர்களின் குழுக்கள், மருந்தடிக்கும் கருவிகள், பணியாளர்களின் பாதுகாப்பு கவச உடைகள் ஆகியவற்றை, தர்மபுரி மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கண்ணன் நேற்று மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் கூறுகையில்,
‘பருவமழை துவங்குவதையொட்டி சூறைக்காற்று வீசும் போது மின்கம்பம், பெரிய மரங்கள் முறிந்து விழுவதற்கான வாய்ப்பு உள்ளது. அது போன்ற தருணங்களில் பேரூராட்சி பணியாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், போதிய பதுகாப்புடனும் பணியை மேற்கொள்ள வேண்டும்,’ என்றார். ஆய்வின் போது, பாலக்கோடு பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்தி உடனிருந்தார்.

Tags : Assistant Director ,
× RELATED உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த வழிமுறைகள்