×

வக்கீல் உள்பட 93 பேருக்கு கொரோனா

தர்மபுரி, செப்.30: இலக்கியம்பட்டி டிஏஎம்எஸ் காலனியில் 42 வயது சுகாதார பணியாளர், 19 வயது மாணவி, பொம்மிடியில் 23 வயது வக்கீல், 55 வயது வியாபாரி, வெண்ணாம்பட்டியில் 47 வயது ஆண், பாலக்கோட்டில் 21 வயது மாணவி, தர்மபுரி பிடமனேரியில் 20 வயது மாணவர், 41 வயது பெண், காரிமங்கலம் பூலப்பட்டியில் 11 வயது மாணவி, 9 வயது மாணவர், பாலக்கோடு திருமல்வாடியில் 18 வயது மாணவர், தர்மபுரி சத்திரம்வீதியில் 15 மாணவர் உள்ளிட்ட 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாவட்டம் முழுவதும் இதுவரை 3776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 938 பேர் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெறுகின்றனர். 2814 பேர் குணமாகினர்.நேற்று ஒரேநாளில் 158 பேர் குணமாகி வீட்டிற்கு சென்றுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Corona ,lawyer ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...