×

கொரோனா நோய் தொற்றால் கல்வி நிறுவனங்களிலும் மாற்றம் துணைவேந்தர் தகவல்

காரைக்குடி, செப்.30:  கொரோனா நோய் தொற்று காலத்தில் தொழில் மற்றும் வர்த்தகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது போல் கல்வி நிறுவனங்களிலும் ஏற்பட்டுள்ளது என அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வணிகவியல் துறையின் சார்பில் தலைமைப்பண்பு மற்றும் மேன்மை என்ற தலைப்பில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் குருமூர்த்தி வரவேற்றார். விழாவை துவக்கி வைத்து துணைவேந்தர் ராஜேந்திரன் பேசுகையில், ‘‘உயர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி வசதிகளை மேம்படுத்துவது அரசின் கடமையாக உள்ளது. அறிவும், திறமையும் கல்வியின் இரண்டு முக்கிய அம்சம். அறிவையும், திறமையையும் ஒருங்கே பெறுவது தான் பட்டம் பெறுவோரின் நோக்கமாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் தொழில்சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள தொழில் நிறுவனங்களில் பயிற்சி தரப்படுகிறது. இதனால் மாணவர்கள் தொழில் துவங்க முன்வரும் நிலை ஏற்படும். நாட்டின் கல்வி வளர்ச்சி 1.0 என்பதிலிருந்து 4.0 வாக உயர்ந்துள்ளது. கொரோனா நோய் தொற்று காலத்தில் தொழில் மற்றும் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் போல் கல்வி நிறுவனங்களிலும் ஏற்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் தலைமை பதவிகளில் உள்ளவர்கள் இளையோர்களை ஊக்குவித்து அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றார். பல்வேறு மாநிலங்களில் இருந்து 250 பங்கேற்பாளர்கள் இணையவழி மூலம் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

Tags : institutions ,
× RELATED கந்துவட்டி நிலைக்கு மாறும் நுண்நிதி நிறுவனங்கள்