×

மழையால் கண்மாய்களுக்கு நீர்வரத்து

சிவகங்கை, செப்.30: மாவட்டத்தில் ஆகஸ்டு மாத தொடக்கத்தில் இருந்து சில பகுதிகளில் மட்டும் கன மழையும், மற்ற பகுதிகளில் லேசான மழையும் பெய்தது. இந்நிலையில் தற்போது கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் அதிகபட்சமாக தேவகோட்டையில் 92.6 மி.மீ மழை பதிவானது. காளையார்கோவிலில் 21.4 மி.மீ, திருப்புவனத்தில் 4.2 மி.மீ, சிங்கம்புணரியில் 0.14 மி.மீ, மானாமதுரையில் 0.26 மி.மீ, காரைக்குடியில் 0.43 மி.மீ, சிவகங்கையில் 0.9 மி.மீ, இளையான்குடியில் 0.5 மி.மீ, திருப்பத்தூரில் 0.79 மி.மீ, மழை பதிவாகியுள்ளது. தொடர் மழையால் விவசாயிகள் கண்மாய், குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

Tags :
× RELATED சென்னையில் ஒரு மணி நேரத்திற்கும்...