×

காவல் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம்

கொடைக்கானல், செப். 30: பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு கொடைக்கானல் காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர். தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (22). நாராயணதேவன்பட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை மகள் பிரகதி (21). இருவரும் கல்லூரி படிக்கும்போது காதலித்து வந்தனர். இதற்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வீட்டைவிட்டு வெளியேறிய காதல் ஜோடி கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இவர்களுடைய பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து கொடைக்கானல் போலீசார் தேனி மாவட்ட போலீசாரிடம் காதல் ஜோடியை ஒப்படைத்தனர்.

Tags : police station ,
× RELATED வைரல் தம்பதி!