கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு 10 ஆண்டு சிறை

மதுரை, செப். 30: திண்டுக்கல் வத்தலக்குண்டு ரோட்டில் கே.பாறைப்பட்டி அருகே கடந்த 25.3.2018 ல் திண்டுக்கல் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த ஜீப்பை நிறத்தி சோதனையிட்டனர். அதில், 240 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜீப்பில் இருந்த தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த கோபி, நாராயணதேவன்பட்டி ராஜ்குமாரை கைது செய்தனர். ஜீப், 240 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வக்கீல் ராஜசேகர் ஆஜராகி வாதிட்டார். இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி மதுசூதணன் நேற்று தீர்ப்பளித்தார். இருவர் மீதான குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: