×

132 ஆண்டுகளுக்கு பிறகு ேகாத்தகிரி சரிவுகளில் ெதன்பட்ட அரியவகை வண்ணத்துப்பூச்சிகள்

ஊட்டி, செப். 30:  ேகாத்தகிரி சரிவுகளில் 132 ஆண்டுகளுக்கு பின் பிராண்டட் ராயல் தாஜூரியா மெலஸ்டிக்மா என்ற அரியவகை வண்ணத்துப்பூச்சி தென்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வகையான அரிய விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்கள் உள்ளன. நீலகிரிக்கே உரித்தான, நீலகிரியை மட்டுமே வாழ்விடமாக கொண்ட தவளை இனங்கள், பூச்சியினங்கள், அரிய வகை வண்டுகள், வண்ணத்துப்பூச்சிகள் அதிகளவில் காணப்படுகின்றன. தற்போது காலநிலை மாற்றம், வெப்பமயமாதல் போன்றவை உலக அளவில் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதுபோன்ற இடர்பாடுகளை உடனுடன் காட்ட கூடிய கருவியாக வண்ணத்துப்பூச்சி உள்ளது. 4 நிலைகளில் நன்கு வளர்ச்சியடைந்த வண்ணத்துப்பூச்சி உருவாகிறது. அவ்வாறு உருவாக மரங்கள், தாவரங்களை சார்ந்து இருக்கிறது.

அதிக வண்ணத்துப்பூச்சி உருவாகும்போது வனப்பகுதிகள் செழுமையாக உள்ளது என்று அர்த்தம். வனவளம் காரணமாக மழை பொழிவு சீராக இருக்கும். இதனால் சூழலியல் சங்கிலியில் வண்ணத்துப்பூச்சி முக்கிய இடம் வகிக்கிறது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை குஞ்சப்பனை, பர்லியார், கல்லாறு, மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் வண்ணத்துப்பூச்சி அதிகம் உள்ளது. மழை பொழிவுக்கு முந்தைய பிப்ரவரி மாதத்திலும், வடகிழக்கு பருவமழைக்கு முன்பு அக்டோர் மாதத்திலும் வண்ணத்துப்பூச்சி இடப்பெயர்ச்சி ஆகின்றன. இந்நிலையில் இந்தியாவில் மிகவும் அரிதாகவே காணப்படக்கூடிய பிராண்டட் ராயல் தாஜூரியா மெலஸ்டிக்மா என்ற வண்ணத்துப்பூச்சி இனத்தை கோத்தகிரி சரிவுப் பகுதிகளில் ஆய்வாளர்கள் அண்மையில் பதிவு செய்துள்ளனர்.

இந்த வகை வண்ணத்துப்பூச்சியை 1888ம் ஆண்டு  ஜி.எப்.ஹாம்ப்சன் என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. 132 ஆண்டுகளுக்கு பின் தற்போதுதான் இது பதிவு செய்யப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து வின்டர்-பிளைத் சங்கத்தின் நிர்வாகியும் வண்ணத்துப்பூச்சியை புகைப்படமெடுத்தவரான வினோத் ஸ்ரீராமுலு கூறுகையில், ‘ப்ராண்டட் ராயல் என்ற பெயரில் அறியப்படும் இந்த வகை வண்ணத்துப்பூச்சிகள் மிக அரிதான ஒன்று. நீலகிரி, திண்டுக்கல், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றை காண்பதே மிகவும் அரிதாகவே உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சியும் ஒரு குறிப்பிட்ட தாவரத்தில் முட்டைகளை இடும்.
இந்த வகை வண்ணத்துப்பூச்சிகள் முட்டையிடும் தாவரங்களின் எண்ணிக்கையும் அரிதாகவே இருக்கலாம். தற்போது கோத்தகிரி பகுதிகளில் இந்த வகை வண்ணத்துப்பூச்சி 132 ஆண்டுகள் கழித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இவை வாழ சாதகமான சூழல் நிலவலாம். எனவே அவற்றை ஆய்வு செய்து பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும், என்றார்.

Tags : foothills ,
× RELATED தேவாரம் மலையடிவாரத்தில் தென்னை...