×

வி.சி. காலனியில் மரம் விழுந்து வீடு சேதம் நிவாரணம் கேட்டு மனு

ஊட்டி, செப். 30:  ஊட்டி வி.சி. காலனியில் மரம் விழுந்து வீடு சேதமடைந்த நிலையில் நிவாரணம் வழங்க கோரி கலெக்டரிடம் அளித்தனர். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட வி.சி. காலனியை சேர்ந்த கிருஷ்ணவேணி, ரங்கநாயகி ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக 20ம் தேதி இரவு 10 மணியளவில் ராட்சத கற்பூர மரம் ஒன்று எங்களது வீடுகள் மீது விழுந்தது. வீட்டில் இருந்த 3 பேர் படுகாயமடைந்து ஊட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடு முழுமையாக சேதமடைந்தது மட்டுமின்றி, வீட்டில் இருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளன. ஏழ்மை நிலையில் உள்ள எங்களின் நிலையை கருத்தில் கொண்டு எங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும். வீடு கட்டுவதற்கான உதவிகளையும் செய்து தர வேண்டும். இதுதவிர வி.சி. காலனி பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...