×

வரத்து அதிகரிப்பால் மல்லிகை ஒரு கிலோ ரூ.250 ஆக சரிவு

பொள்ளாச்சி, செப்.30:   பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து ஓரளவு இருந்தாலும் விற்பனை மந்தமடைந்துள்ளது. இதில், ஒரு கிலோ மல்லிகை ரூ.250ஆக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி தேர்நிலை பூ மார்க்கெட்டுக்கு சுற்று வட்டார கிராம பகுதிகளிலிருந்து மட்டுமின்றி மடத்துக்குளம், உடுமலை, கணியூர் நிலக்கோட்டை, கரூர், பழனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், நாமக்கல், மதுரை உள்ளிட்ட பல பகுதியிலிருந்து இருந்து பூக்கள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கு வரும் பூக்களை உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, கேரள மாநில பகுதி வியாபாரிகள் மொத்த விலைக்கு வாங்கி செல்கின்றனர்.  இதில் கடந்த சில வாரத்திற்கு முன்பு வரை தொடர்ந்து பருவமழை இருந்ததால், அந்நேரத்தில் பூக்கள் வரத்து மிகவும் குறைவாக இருந்தது.

மேலும், அந்நேரத்தில் சுபமுகூர்த்த நாட்கள் இருந்ததால் அப்போது ஒரு கிலோ மல்லிகை ரூ.1000 வரை விற்பனையானது.பின் கடந்த 2 வாரமாக  மழை குறைந்து வெயிலின் தாக்கத்தால், இந்த மாதம் துவக்கத்திலிருந்து மீண்டும் பூக்கள் வரத்து அதிகரித்தது. மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து ஓரளவு இருந்தாலும், புரட்டாசி மாதம் மற்றும், சுப முகூர்த்த நாட்கள் இல்லாததாலும் அனைத்து ரக பூக்களின் விலை சரிந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை மற்றும் முல்லை ரூ.250க்கும், ஜாதிமுல்லை ரூ.200க்கும், அரளி ரூ.80க்கும், சில்லி ரோஸ் ரூ.130க்கும், செண்டுமல்லி ரூ.80க்கும் என மிக குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலை புரட்டாசி மாதம் நிறைவடையும் வரை இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Jasmine ,
× RELATED தெலுங்கு வருடபிறப்பை ஒட்டி மதுரை...