×

மது குடித்த வாலிபர் சாவு

செய்யாறு, செப்.29: செய்யாறு ஆற்றுப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் நேற்று முன்தினம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து, தகவலறிந்த செய்யாறு சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், நடத்திய முதற்கட்ட விசாரணையில் சடலமாக கிடந்தவர், செய்யாறு அடுத்த வெள்ளை கிராமத்தை சேர்ந்த தனசேகரன்(35), பைக் ஷோ ரூமில் மெக்கானிக் வேலை செய்து வந்ததும், அளவுக்கு அதிகமாக மதுகுடித்தால் மயங்கி விழுந்து இறந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Death ,
× RELATED கோவையில் பிரியாணி உணவகம் ஆரம்பித்த திருநங்கை வீடு புகுந்து வெட்டிக்கொலை