×

வேலூர் மாவட்டத்தில் நாய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வைக்க வேண்டும் கலெக்டர் வலியுறுத்தல்

வேலூர், செப்.29: வேலூர் மாவட்டத்தில் நாய்களின் எண்ணிக்கையை கட்டுக்கள் வைக்க வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் பேசினார். வெறிநோய் தடுப்பு மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானி லூயிஸ் பாஸ்ட்டர் நினைவு தினமான செப்டம்பர் 28ம் தேதி உலக வெறிநோய் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று முதல் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. அதன்படி வேலூர் கால்நடை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடந்த முகாமை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்து பேசியதாவது: தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை விட வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கும் நாய்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது. தெரு நாய்களை கொல்ல, சுப்ரீம்கோர்ட் தடை விதித்துள்ளது. இதனால் கருத்தடை செய்யப்பட்டு வருகிறது. கருத்தடை செய்வதால், உணவு சங்கிலி தொடர்பாக ஒரு இனம் அழிக்கப்படும்.

ஒரு இனம் அழிக்கப்பட்டால், மனிதனுக்கு, அந்த இனத்திற்கான சங்கிலி தொடர்பு அற்று விடும். இதனால் கருத்தடை செய்வதில் பல சிக்கல் உள்ளது. நாய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வைக்க வேண்டும். பொதுமக்கள், தங்கள் சுற்று பகுதியை தூய்மை வைத்திருக்க வேண்டும். குப்பைகள் சேர்ந்தால் நாய்களுக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நாய்கள் இல்லையென்றால் பூனை மற்றும் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும். செல்ல பிராணியாக வளர்க்கப்படும் நாய்களுக்கு முறையான தடுப்பூசி போட்டு பரமாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Collector ,Vellore district ,
× RELATED கலெக்டர் அறிவிப்பு மக்கள் பாதை வழியாக...