×

செய்துங்கநல்லூர் அருகே ஆறாம்பண்ணையில் இடிந்த நிலையில் ரேஷன்கடை

செய்துங்கநல்லூர். செப்.29: செய்துங்கநல்லூர்  அருகே ஆறாம்பண்ணை  கிராமத்தில்  இடிந்த நிலையில் உள்ள ரேஷன் கடை கட்டிடத்தை  அப்புறப்படுத்தி புதிய ரேஷன் கடை  கட்டவேண்டும் என  ஊர் பொதுமக்கள்  வலியுறுத்தியுள்ளனர்.   ஆறாம்பண்ணை கிராமத்தில் கடந்த மூன்று  ஆண்டுகளுக்கு முன்பே  ரேஷன் கடைகட்டிடம்  இடிந்த நிலையில் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் ரேஷன் கடைக்கு வர அச்சப்பட்டனர். இதையடுத்து ரேஷன் கடையை வேறு ஒரு கட்டிடத்துக்கு மாற்றி பொருட்கள்  வழங்கி வருகின்றனர்.  இடிந்த  ரேஷன் கடை கட்டிடத்தின் அருகே சிறுவர்கள் ஆங்காங்கே விளையாடி கொண்டிருப்பதால்  அபாயநிலை உள்ளது.

எனவே  பழுதடைந்த ரேஷன்கடை கட்டிடத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிய ரேஷன் கடை கட்டி தருமாறு ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏற்கனவே பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  எனவே  இதுகுறித்து சம்பந்தப்பட்ட கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உரிய நடவடிக்கை எடுத்து இடிந்த நிலையில் உள்ள ரேஷன் கடையை  அப்புறப்படுத்தி புதிய ரேஷன் கடை கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : ration shop ,Aarampannai ,Cheytunkanallur ,
× RELATED நடமாடும் ரேஷன் கடை துவக்கம் எம்எல்ஏ பங்கேற்பு