×

தோப்புவளம் கிராமத்தில் வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம்

சாத்தான்குளம், செப்.29: தோப்புவளம் கிராமத்தில் வெங்கடேஷ் பண்ணையார் 17ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
சாத்தான்குளம் அருகே உள்ள தோப்புவளம் கிராமத்தில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் வெங்கடேச பண்ணையாரின் 17வது ஆண்டு நினைவு வீர வழிபாடு நடந்தது. நிகழ்ச்சிக்கு சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் மகனும், அக்கட்சி மாநில மாணவரணி செயலாளருமான கார்த்திக்நாராயணன், வெங்கடேஷ் பண்ணையார் உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சமத்துவ மக்கள் கழக ஒன்றிய செயலாளர் தனசெல்வராஜா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் தினேஷ்சிவகுமார், ஒன்றிய மாணவரணி செயலாளர் ஜெகன்சாமுவேல், துணைச்செயலாளர் கணேசன், வக்கீல் அணி செயலாளர் பொன்செல்வன்விஜய், ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் சிவக்குமார் கலந்து கொண்டனர்.

Tags : Venkatesh Pannayar Memorial Day ,Toppuvalam ,village ,
× RELATED தேன்கனிக்கோட்டை அருகே கிராமத்தில் நுழைந்து 10 யானைகள் அட்டகாசம்