×

வேளாண் மசோதாைவ திரும்ப பெறக்ேகாரி திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அவிநாசி, செப். 29:  அவிநாசியில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அவிநாசி ஒன்றிய திராவிட முன்னேற்ற கழக பொறுப்பாளர் சிவபிரகாஷ் தலைமை தாங்கினார். நகர திமுக செயலாளர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார். ஆதி தமிழர் பேரவை மாநில தலைவர் அதியமான் பங்கேற்று கண்டன உரையாற்றினார். இதில் தோழமைக்கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கமிட்டனர்.
இதேபோல, அவிநாசி அருகே பெருமாநல்லூரில் நால்ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு  தொமுச.தொழிற்சங்க வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். திருப்பூர் ஒன்றிய திமுக செயலாளர் விஸ்வநாதன், காங்கிரஸ் வட்டார தலைவர் கருப்பசாமி, ஐஎன்டியுசி சிவசாமி, மதிமுக ஒன்றிய செயலாளர் சந்திரமூர்த்தி, விசிக. திருப்பூர் வடக்கு தொகுதி செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம்: காரணம் பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். உ.உ.க. மாநில தலைவர் செல்லமுத்து முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் திமுக,காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்,விசிக உள்ளிட்ட தோழமை கட்சி நிர்வாகிகளான தேன்மொழி,புண்ணியமூர்த்தி,ஈஸ்வரன், கணேசன்,  சுப்பிரமணியம்,சாகுல் ஹமீது,பரமசிவம்,ராஜேந்திரன்,முஜிபுர் ரகுமான்,பீர்முகம்மது,ரங்கசாமி,பரமசிவம்,சுப்பிரமணியம், சிவகுமார், சின்னச்சாமி,சரஸ்வதி காந்தி,சேகர்,விமல்,நடராஜன்,சேகர், பிரகாஷ், ராஜேஸ்வரன்,சிவா, பாலகுமார்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உடுமலை: உடுமலை தொகுதியில் 12 இடத்திலும், மடத்துக்குளம் தொகுதியில் 20 இடத்திலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மடத்துக்குளம் நால் ரோட்டில், திமுக., எம்எல்ஏ., ஜெயராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக.,வினர் மற்றும் காங்கிரஸ் சார்பில் சுப்பிரமணி, கொமதேக சதீஷ், மா.கம்யூனிஸ்ட் முத்துசாமி, ஈஸ்வரன்(மதிமுக), வெங்கடேசன்(தி.க) மற்றும் இமானுவேல், முகமது ஹக்கீம், முருகானந்தம், ஈஸ்வரன் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மடத்துக்குளம் தொகுதியில் 20 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

குடிமங்கலம் ஒன்றிய பெதப்பம்பட்டியில் திமுக செயலாளர் பொன்.முருகேசன் தலைமையிலும், உடுமலை ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையிலும், மாவட்ட பொருளாளர் முபாரக் அலி தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. தேவனூர்புதூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றிய செயலாளர் புவியரசு தலைமை வகித்தார். இணை செயலாளர் செழியன் முன்னிலை வகித்தார்.
இதில் லலிதாமணி ரங்கநாதன், நிர்வாகிகள் சண்முகம், வடிவேல், கொங்கு சின்னதம்பி, சிவக்குமார், காங்கிரஸ் கனகுராஜ்,இளைஞர் காங்கிரஸ் முத்துக்குமார், மதிமுக குமார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பங்கேற்றனர்.முக்கோணம் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் மொடக்குப்பட்டி ரவி தலைமை தாங்கினார். வாளவாடியில் மாவட்ட கவுன்சிலர் பாபு மலர்விழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மலையாண்டி கவுண்டனூர் நால்ரோடு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இ.கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார்.

திமுகவின் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திமுக ஒன்றிய பொறுப்பாளர் செல்வராஜ், மா.கம்யூ., கனகராஜ், விவசாய சங்க தலைவர் தண்டபாணி, மதிமுக வைரவேல் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், தொண்டர்கள்,விவசாயிகள் பலர் பங்கேற்றனர். மேலும் குறிச்சிக்கோட்டை, வாளவாடி, எலையமுத்தூர், குடிமங்கலம், குமரலிங்கம், கணியூர் உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
எளையமுத்தூர் பிரிவு: உடுமலை ஒன்றியம் எளையமுத்தூர் பிரிவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய பொறுப்பாளர் செல்வராஜ்,ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கமணி,ஜெயப்பிரகாஷ்,சுமதி கார்மேகம் மற்றும் கல்லாபுரம் ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி பழனிச்சாமி,வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல குடிமங்கலம் நால்ரோட்டில் திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனிக்கடவு ஊராட்சி முன்னாள் தலைவர் கிரி,கார்த்திக்,மொகவனூர் பொன்னுசாமி,கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தாராபுரம்: மூலனூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் தலைமை தாங்கினார்.பழனிச்சாமி, தண்டபாணி, கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர். இதே போல அலங்கியத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு உஉக ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார்.ரவி,தேவி குப்பு,ஆஷிக் பாட்ஷா,ஆதித்யன், தி.க.சிதம்பரம் உட்பட 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

காங்கயம்:காங்கயம் தாலூகாவில் திமுக சார்பில் 11 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.காங்கயம் வடக்கு திமுக சார்பில் சிதம்பரம் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் புறநகர் மாவட்ட காங். தலைவர் கோபி, கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் காங்கயம் ஒன்றியத்தில் முத்தூர்ரோடு பிரிவு, காங்கயம் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு, படியூர், சிவன்மலை நால்ரோடு, தொட்டிபொளையம் பிரிவு ஆகிய இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக முன்னாள்அமைச்சர் சாமிநாதன், அப்புக்குட்டி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வெள்ளக்கோவில் ஒன்றியத்தில், வெள்ளகோவில் புதிய பேருந்து நிலையம், சிவநாதபுரம், முத்தூர் கடைவீதி, ஓலப்பாளையம் கடைவீதி, தாசவநாயக்கன்பட்டி ஆகிய ஐந்து இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் வெள்ளகோவில் திமுக ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம், குமரவேல்,பழனிசாமி,  லோகநாதன், பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சுல்தான்பேட்டை: கோவை கிழக்கு மாவட்டம் சுல்தான்பேட்டை ஒருங்கிணைந்த ஒன்றிய தி.மு.க. சார்பாக சுல்தான் பேட்டை பேருந்து நிலையத்தில் ஒன்றிய பொறுப்பாளர் மகாலிங்கம் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.  மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் வேலுசாமி, கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் முத்து மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  காங்கிரஸ் வட்டார தலைவர் சிவகுமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மண்டல இளைஞரணி அமைப்பாளர் பெரியசாமி, தி.மு.க. மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் தர்மராஜ், ம.தி.மு.க ஒன்றிய செயலாளர் கந்தசாமி, கம்யூனிஸ்ட் சார்பில் திருமலைசாமி, உழவர் உழைப்பாளி கட்சி சார்பில் ஈஸ்வரன்,  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஒன்றிய செயலாளர் கிரீ, தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் அப்பாகுட்டி, விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் பாலு, ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேஸ்வரி , கவிதாதர்மராஜ், சாந்தாமணி விஸ்வநாதன், சரிதா வீரமுத்து, சாரதாமணி காளிமுத்து, பழனிச்சாமி,  ஒன்றிய கவுன்சிலர்கள் விஜயகுமார், ரங்கசாமி பிரேமலதா, கார்த்திகேயன், மகேஸ்வரி சக்திவேல், நிர்மலா சௌந்தர்ராஜன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கம்யூனிஸ்ட் கட்சி ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags : Demonstration ,alliance parties ,withdrawal ,DMK ,
× RELATED கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்