நிலக்கடலைக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

அவிநாசி,செப்.29:  கோபி, தாராபுரம், புளியம்பட்டி, நம்பியூர், தெங்குமரஹடா, மலையப்பாளையம், அந்தியூர், அத்தாணி, கோபி, அன்னூர், அவிநாசி, ஈரோடு ஆகிய பல்வேறு பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், நிலக்கடலை சாகுபடியில் ஏக்கர் ஒன்றுக்கு 22 மூட்டைகளுக்கு மேல் கூடுதலாக கிடைக்க வேண்டிய நிலையில், தற்போது நிலக்கடலை மகசூல் குறைந்துள்ளது. ஒரு மூட்டை நிலக்கடலை பறிப்பதற்கு ரூ. 700 வரை செலவாகிறது. சென்ற வருடத்தை காட்டிலும் இந்த வருடம் நிலக்கடலை உற்பத்தி குறைந்துள்ளது. எதிர்பார்த்த அளவு வரத்து இல்லை. உரிய விலையும் கிடைப்பதில்லை.

இதனால் விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கிறது. அதிக முதலீடு, கூலி, உற்பத்தி செலவு, வாகன கட்டணம் ஆகியவற்றை செலவு செய்து சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலைக்கு  கட்டுப்படியாகாத விலைக்கு நிலக்கடலையை விற்பனை செய்கிறோம். இதனால் விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கிறது. எனவே, விவசாயிகளை பாதிக்காத வகையில் நிலக்கடலைக்கு உரிய விலை கிடைக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நிலக்கடலை விவசாயிகள் கூறினர்.

Related Stories: