×

கரட்டுமடத்தில் முறைகேடாக மது விற்பனை

உடுமலை,செப்.29: உடுமலை அருகே உள்ள கரட்டுமடத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு காலை 10 மணிக்கு கடை திறப்பதற்கு முன்பாகவே, முறைகேடாக அருகில் ஷெட் அமைத்து மது விற்பனை கள்ளத்தனமாக நடக்கிறது. சமூக இடைவெளியின்றியும், முக கவசம் அணியாமலும் கூட்டமாக நின்று குடிமகன்கள் மதுவாங்கி செல்கின்றனர். அப்பகுதியில் மருத்துவமனை மற்றும் பள்ளி உள்ளது. மேலும் மது பாட்டில்களை வாங்கிச்சென்று இரு சக்கர வாகனங்களில் கிராமங்களில் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதிகாரிகள் இதை கண்காணித்து தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bar ,
× RELATED இயற்கை உரம் விற்பனை