×

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஊட்டி,செப்.29: மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள விவசாயிகளை வஞ்சிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்தும், இந்த சட்டங்களுக்கு ஆதரவளித்த அதிமுக., அரசை கண்டித்தும் மாநிலம் முழுவதும் திமுக., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக ஊட்டி நகர திமுக., சார்பில் ஊட்டி ஏடிசி., திடலில் கண்டன ஆர்பாட்டம் நேற்று நடந்தது.  ஆர்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், ஊட்டி தொகுதி எம்எல்ஏ.,வுமான கணேஷ் தலைமை வகித்தார். ஊட்டி நகர திமுக., செயலாளர் ஜார்ஜ், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்பாட்டத்தில் விவசாயிகளை பாதிக்கும் வேளாண்மை சட்டங்களை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும், அதனை ஆதரித்த மாநில அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாவட்ட அவை தலைவர் முத்துசாமி, மாவட்ட பிரதிநிதி ராஜா, நகர துணை செயலாளர் இச்சுபாய், புரவலர் பெரியசாமி, கார்டன் கிருஷ்ணன், சசிகுமார், ரவி, முஜி, புஷ்பராஜ், மஞ்சுகுமார், ஜுபீர், காந்தள் சம்பத், தியாகு, செல்வா, ஜெரி, ஸ்டேன்லி, பாலமுருகன், சதாசிவம் அன்வர் கான்,மகளிர் அணி சார்பில் வாணீஸ்வரி, ரீட்டா மேரி, லூயிசா, பிரியா, வாசுகி, செல்வி, காங்கிரஸ் நகர தலைவர் கெம்பைய்யா, உதய ரவிகுமார், சையது, நாகராஜ், நாதன், வின்சென்ட், சுதாகர், மகேஷ், ஜெயராம், கார்டன் மூர்த்தி, கோபிநாத், சிபிஎம் சார்பில்சங்கரலிங்கம், ராஜேந்திரன், சுரேஷ், ராதாகிருஷ்ணன், புட்டுசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கட்டாரி, தம்பி இஸ்மாயில், சுதகார், தமமுக., சார்பில் அபுதாகீர், சிபிஐ., பெள்ளி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் கோத்தகிரி, எல்லநள்ளி, எஸ்.கைகாட்டி உட்பட மாவட்டம் முழுவதும் 19 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மஞ்சூர்: விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டத்தை எதிர்த்தும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மஞ்சூரில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட விவசாயிகளை வஞ்சிக்கும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த சட்டங்களுக்கு ஆதரவு அளித்த அதிமுக அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மாவட்டத்தில் நேற்று 19 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மஞ்சூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சுப்ரமணி தலைமை தாங்கினார். திமுக மாவட்ட அவை தலைவர் பில்லன், தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் ராஜூ, நிர்வாகிகள் தமிழ்செல்வன்,சின்னான்,மாடக்கன்னு, ராதாகிருஷ்ணன்,  ஆறுமுகம், காங்கிரஸ் கட்சிநேரு,நாகராஜ், சிவக்குமார், மானேஷ்சந்திரன், பேரூராட்சி தலைவர் ராஜ்குமார், கம்யூனிஸ்ட் ஆரி, ரகுநாதன், ஏஐடியூசி  சிவக்குமார்,அலியார்,திமுக கிளை செயலாளர்கள் சத்தியநாதன்,நாராயணன், பிரபு,சிவக்குமார்,சங்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குன்னூர்: நீலகிரி  திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்  சார்பில்  ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.குன்னூர் விபி தெரு பகுதியில் நடந்த ஆர்பாட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை வகித்தார். இதில் குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்செல்வன், மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் அன்வர் கான், பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, ஷீலா கேத்தரின்,செல்வம், தலைமை பேச்சாளர் முபாரக், காங்கிரஸ் லாரன்ஸ், சிபிஎம் ராமன் குட்டி, சிபிஐ ரங்கன்,விசிக சுதாகர், திக கருணாகரன், நாகேந்திரன் ஆகியோர் மற்றும்  கூட்டணி கட்சி பிரதிநிதிகள், திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது வேளான் சட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
கூடலூர்:கூடலூர் புதிய பேருந்து நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக எம்எல்ஏ திராவிடமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் சாஜி, அப்துல் ரகுமான்,சுல்பிகர் அலி, கம்யூனிஸ்ட் கட்சி வாசு,பாலகிருஷ்ணன்,குணசேகரன், அனீபா,புவனேஸ்வரன்,சாதிக் பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதே போல தேவர்சோலை பஜாரில் ஒன்றிய செயலாளர் லியாகத் அலி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளான சைதுமுகமது,அசைனார்,ஜோஸ், ரசீத்,பொன்னு,சங்கர்,வாசிம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் மூர்த்தி, சிரிராஜா, சுப்ரமணி, ஒன்றிய தலைவர் கீர்த்தனா,
பேரூர் செயலாளர் மாதேவ்  தொமுச பொதுச்செயலாளர்நெடுஞ்செழியன், பிரதீஸ், தமிழழகன்,தாகிர்,பாரதி இளவரசன்,கணேசன் வார்டு செயலாளர்கள் -  ஸ்டேன்லி, ராமமூர்த்தி, கோயா, இப்ராகிம்,பால்ராஜ் கருப்பையா, அசீஸ்,சாமிநாதன்,சிஜி, நஸீமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல ஸ்ரீ மதுரை ஊராட்சி மன்வயல் பஜாரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மணி,முருகன்,ஜோஸ், கேவி ஜோசப், தேவியா, பாபு, வார்டு செயலாளர் வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஓவேலி பேரூராட்சி பெரிய சூண்டியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமையில் திமுக மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் செல்வரத்னம்,காங்கிரஸ் ஓவேலி பேரூராட்சி செயலாளர் இப்னு, மா. கம்யூ. செயலாளர் குஞ்சுமுகமது, விசிக சிவானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக பாபு,முஸ்தபா,கணேசன்,காங்கிரஸ் மனோகரன்,கோயா,சுரேஷ், மற்றும்சாகுல், கமது,காஞ்சனா,அம்பிகா,மோகன்,சசிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பந்தலூர்: பந்தலூர் பஜாரில் நேற்று  நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக நெல்லியாளம் நகர செயலாளர் காசிலிங்கம்  தலைமை வகித்தார்.காங்கிரஸ் சார்பில் கோபிநாதன், மா.கம்யூ நிர்வாகி ரமேஷ்,  இ.கம்யூ.நிர்வாகி முருகன்,இந்திய யூனியன் முஸ்லிம்லீக்ஆலி, திமுக நகர  நிர்வாகிகள் சிவசுப்பிரமணியம்,தென்னரசு,சீலா,ராமச்சந்திரன், நாகராஜ், ஆலன்,  அமிர்தலிங்கம் இளைஞரணி சேகர்,முரளிதரன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.

இதே  போல அய்யன்கொல்லி பஜாரில் திமுக ஒன்றிய செயலாளர் சிவானந்தராஜா தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுகவினர்  ஏராளமானோர் கலந்து கொண்டனர். எருமாடு பஜாரில் மா.கம்யூ.,மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக பொது குழு உறுப்பினர் ராஜா,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நௌபல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : allies ,DMK ,governments ,state ,
× RELATED சிறுமி படுகொலை கண்டித்து முழுஅடைப்பு...