குழந்தைகள் வார்டிற்கு புதிய வெண்டிலேட்டர்

கோவை, செப். 29: கோவை அரசு மருத்துவமனையில் கோவிட் பாதுகாப்பு திட்டத்திற்காக மருத்துவமனையின் குழந்தைகள் வார்டிற்கு புதிய வெண்டிலேட்டர் வழங்கப்பட்டுள்ளது. இதனை கோவை ரோட்டரி கிளப் ஆப் டவுன், கோவை ரோட்டரி கிளப் ஆப் ஜெனித் ஆகியவை இணைந்து அளித்தது. இதனை மருத்துவமனையின் டீன் காளிதாஸ் பெற்றுக்கொண்டார். இது குறித்து ரோட்டரி கிளப் கோவை டவுன்டவுன் கோவிட் பாதுகாப்பு திட்ட தலைவர் காட்வின் மாரிய விசுவாசம் கூறுகையில், ‘‘கொரோனா நோயாளிகளை பிரித்து சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவமனையுடன் இணைந்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, வெண்டிலேட்டர் வழங்கப்பட்டது. 800 கிராம் உள்ள குழந்தைகளுக்கு புதிய மருத்துவ கருவி வழங்கப்பட்டது. மேலும், ரூ.13 லட்சம் மதிப்பிலான டர்போ டாப்ளர் ஸ்கேனர் கருவி வழங்கப்பட்டுள்ளது. திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.53.87 லட்சம் ஆகும்’’ என்றார். இதில், கோவை ெஜனித் ரோட்டேரியன் கோகுல்ராஜ், ஜிஜிஆர் ரோட்டரியன் ரவிராஜ், சுமித்குமார் பிரசாத் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து, கோவிட் பாதுகாப்பு திட்டத்தை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி காணொலி மூலம் துவக்கிவைத்தார்.

Related Stories: